1ம் ஆண்டு நினைவஞ்சலி

Pushpavathy Sivananthaguru
Age 80
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai, Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஷ்பவதி சிவானந்தகுரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயே...
அன்புக்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்தீர்கள்...
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல புரிந்தீர்கள்....
துன்புற்றோர் துயர் துடைத்து அடைக்கலம் அளித்தீர்கள்.
பொன்னுச்சாமி சோதிமுத்து
பெற்றெடுத்த ஆசை மகளாம் நீயே....
வளமான வாழ்க்கையை எமக்களித்த
எம் குடும்பத்து அழகு திருவடியே.
பட்சி என்று இனிமையாய் அழைக்கப் பெற்ற
எங்கள் குல அகல் விளக்கே...
சுழல்காற்று அணைத்ததோ
எம்மிடமிருந்து உன்னை...ஆண்டவா!
இனி யாரை அழைப்போம் அம்மா என்று...
எம்மோடு நீ வாழ்ந்த காலங்கள்
சரித்திரமாய் ஆனதம்மா...
உன் புன்னகை முகம் எம்மோடு
என்றறென்றும் உயிர் வாழும்...
பூவுலகை விட்டு நீங்கள் விடைபெற்றாலும்
எம் மனதை விட்டு அகலாதிருப்பீர்கள்.
தங்கள் ஆத்மா நன்னிலை பெற்று
வல்வை முத்துமாரி அம்மன்
திருவடியை அடைய வேண்டுகிறோம்...
விழிநீரோடு உன்னை வழியனுப்புகிறோம்.
அம்மா, உன் ஆத்மா சாந்தியடையட்டும்!
எம் உயிர் உள்ளவரை உன் ஜீவன் எம்மோடு கதை பேசும்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

