Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Puvaneswary Sivasubramaniam

In loving memory of

Puvaneswary Sivasubramaniam

Age 55June 27, 1961 – April 2, 2017

Born in
Analaitivu
Lived in
Mannar, Watford

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் 10 ஆம் கட்டை உயிலங்குளம், லண்டன் Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் ஆருயிர்த் தெய்வமே அன்பான உத்தமியே!
என் தாய்க்கு பின் என் தாரமாய் தாயாக ஆனவளே!
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
என் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றேன்!

தொலைத்துவிட்ட ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை தேடாத நாட்களில்லை!
உங்களைக் காணாத என் கண்கள்
நித்திரையை தொலைத்துவிட்டு நீரை வடிக்குதம்மா!

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழி நடத்திய எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் இல்லா இவ்வுலகம் என்றும் இருள் மயமானது!
எனது உயிருள் உயிரானவளே- நான்
கட்டாயம் கடவுளுக்கு நன்றி சொல்வேன்!
கடுகளவும் குறையேதுமில்லாத
உத்தமியை எனக்குத் துணைவியாய் தந்ததற்கு..!

"உச்சிவானில் ஒளிர்ந்து கொண்டிருந்த
நட்சத்திரம் விடிய முன்னே விழுந்து விட்டது"

எமக்கு உயிர் தந்த அம்மா! அம்மா!
தவிக்கின்றோம் நீங்கள் இன்றி
ஆண்டொன்று சென்றாலும்
ஆறாது அம்மா எமதுள்ளம்!
ஆறாத்துயரம் இன்னும் நெஞ்சில்
நீறாக நின்றெரியுதம்மா!

எங்கள் நெஞ்சுக் குடுவைக்குள்
உங்கள் அன்பை நிரப்பிவிட்டு நீங்கள்
நீண்ட துயில் கொண்டதனால்
நாம் பொய்கையாய் வாழ்ந்த இல்லம்
பாலை வனமாய் கிடக்குதம்மா!
நீங்கள் சமைத்த சமையலறை
மணமிழந்து சுவையிழந்து கிடக்குதம்மா!

பிள்ளைகள் மூவரையும் வளர்ப்பதை
பிறவியில் உயர்வாய் நினைத்தீர்கள்
இன்று நாம் உங்கள் ஆசை முகத்தைக் காணவில்லை!
அன்புடன் எம்மை அழைக்கும் குரல் கேட்கவில்லை!
உங்கள் அன்பு மொழிகள், அறிவுரைகள்,
ஆசை முத்தங்கள் கிடைக்காது அன்பு முகம் காணாது
அழுது புலம்புகின்றோம்!

எத்தனை இடர்கள் துன்பங்கள் வந்தபோதும்
எங்களைப் பார் போற்றும், ஒழுக்கசீலர்களாக வளர்த்து
இவ்வையத்துள் முந்தியிருக்கச் செய்த எங்கள் அம்மா!
என்றும் எங்கள் சிந்தையிலே மறவாத
நினைவுகளில் வாழ்வீர்கள்...!

எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
எமது தெய்வத்தை மலர் தூவி
மலர்பாதம் வணங்குகின்றோம்!

என்றும் உங்கள் அன்புக்கு ஏங்கும்
கணவர், பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்மார்,
மைத்துனிமார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

வீட்டு முகவரி:
217 Harwoods Rd,
Watford,
WD18 7RU,
UK.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · April 3, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.