1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rajadurai serishkantharajah
Age 53April 11, 1956 – May 18, 2009
- Born in
- Kili Nallur
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநல்லுரை பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் கேர்கைம்ரெக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை சிறிஸ்கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், இராஜதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜி, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறிஸ்கந்தராணி யோகாநந்தராஜா, தயாளினி, நந்தகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
ஓராண்டு ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட உன் அப்பா அம்மா நாங்கள்
உன்னைத் தேடுகின்றோமே தம்பி சிறி!
உன் வருகை காணாது
உன் குரல் கேட்காது ஏங்கி
தவிக்கின்றோமே தம்பி சிறி!
பாசமிகு இல்லற வாழ்வைவிட்டு, விரைந்து
எங்குதான் சென்றீர்களோ அப்பா?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ அண்ணா?
உன் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது சிறி
உன் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவாயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கின்றோம்.
— அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மச்சான்மார், மச்சாள்மார், மருமக்கள், பெறாமக்கள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

