Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Rasamma Gurusamy

In loving memory of

Rasamma Gurusamy

June 17, 2016

Born in
Elalai
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா குருசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குருசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமாரன்(கனடா), உருத்திராபதி(கனடா), மணிமேகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, இராசையா, கந்தையா, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலாதேவி(கனடா), நவநாயகி(கனடா), லக்வின்டர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(கோண்டாவில்), பொன்னையா(மீசாலை), பரிமளம்(மீசாலை), பூரணம்(யாழ்ப்பாணம்), பறுவதம்(மல்லாகம்), தம்பிமுத்து(ஏழாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சற்குணம்(சாவகச்சேரி), மனோன்மணி(பிரான்ஸ்), இரத்தினம்(பிரான்ஸ்), கந்தசாமி(சுன்னாகம்), மற்றும் மேரி இராணி(Minnesota, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

துசாந்தன்(கனடா), துசீபன்(கனடா), நிரூசன்(கனடா), சோபியா(கனடா), நிசாந், நிர்மல்(கனடா), சுசிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அம்மா! அம்மா! நீ திருநீறுபூத்த நெற்றியுடன்
திருக்கோவில் உள்ள ஊரெல்லாம்
இறைவனை தேடித்தேடி
ஆறுபோல ஓடிக் கொண்டிருந்தாயே!

இன்று இந்த பாசமலர்களைத் தவிக்கவிட்டு
சென்ற தேசந்தான் என்னம்மா?

உன் நேசமழையில் நனைந்த
எம்மைவிட்டு நீங்கள்
வேறுதிசை நோக்கி எங்கே சென்றாயம்மா?

உன் பிரிவைத் தாங்கமுடியாமல்
தவிக்கும் எங்கள் முன் நேரில் வந்திடமாட்டாயா?

வீறுகொண்ட உன் வாழ்வை
எண்ணி எண்ணி ஆறிடவோ முடியாமல்
அழுது துடிக்கின்றோம்

பாசமுள்ள எங்கள் தாயே!
உந்தன் ஆத்மா சாந்தி பெற
ஆறுகால பூஜைகளும் அயராமல் செய்கின்றோம்

உந்தன் மன விருப்பின்படி அன்னதான பூஜைகளை
ஊரில் உள்ள ஏழைமக்களுக்கு ஒழுங்காகச் செய்து
அவர்களின் பசி போக்கி உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை என்றும் வேண்டுகின்றோம்!

என்றும் உங்கள் நீங்காத நினைவுகளை தேடித் தவிக்கும்
பாசமிகு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், உதவிகள் புரிந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து எமது துயரில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும், இறுதிக்கிரியையில் பங்குகொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · June 17, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.