2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasappu Arumainaayagam
Age 63September 2, 1944 – January 19, 2008
- Born in
- Palali
- Lived in
- vathiri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபலாலியில் பிறந்து வாழ்ந்து, தற்காலிகமாக வதிரியில் வசித்து வந்த இராசப்பு அருமைநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமதருமை தெய்வமே!
எங்கள் பாசத்தின் திருவுருவே!
இரண்டு ஆண்டுகள் சென்றனவோ?
எம்மை வி்ட்டு நீங்கள் பிரிந்து
இருக்கவே இருக்காது ஏன் என்றால்
எம்மோடுதான் வாழ்கின்றீர்களே
பிள்ளைகள் தேடுகிறோம் வாடுகிறோம் அப்பா
மனைவி மனதுக்குள் அழுகின்றோம் ஐயா
எங்கே எமது அன்பு அப்பப்பா, அம்மப்பா
என ஏங்கித் தேடும் பேரப்பிள்ளைகள்
அப்பப்பா தூக்கவும் இல்லை
கட்டி அனைத்து முத்தம் இடவுமில்லை
அரவணைத்து அன்பைப் பொழியவும் இல்லை
அவர் திருமுகத்தை நாம் காணவும் இல்லை
இனி எப்போது உங்கள் திருவுருவத்தை
காண்போம் அப்பப்பா!
மெளனமாகத் தேடித் தவிக்கும் மருமக்கள்
இயற்கையோடு நீங்கள் கலந்தாலும் கூட
உங்கள் அன்பின் வழியே வாழ்ந்து
உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!
உங்கள் நினைவுகளோடு வாழும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
— றொபின்சன் சந்தோஸ், றொபின்சன் கபிலேஸ்(பேரப்பிள்ளைகள்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

