7ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasenthiram Kirubakaran
Age 34May 5, 1975 – May 14, 2009
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Mannar Puthukudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் கிருபாகரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈருயிர் ஓருயிராக இணைந்த
இரண்டு ஆண்டுக்குள் என்னை
விட்டுச் சென்று விட்டீர்களே!
ஏன் அன்பே அப்படி
என்ன அவசரம் உங்களுக்கு?
அன்பான மாமியும் இல்லை
பாசமான மச்சாளும் இல்லை
உங்கள் பிள்ளை உங்களை
அப்பா என்று அழைப்பதற்கு
முன்பே சென்று விட்டீர்களே!
இன்று எங்கே என் அப்பா
என ஏங்குகிறதே அது
உங்களுக்கு கேட்கவில்லையா!
திரும்பவும் மீண்டும் இருவருக்கும்
மனிதப்பிறப்பு ஒன்று இருந்தால்
எனக்கு கணவராக கிடைக்க வேண்டும் அன்பே!
உங்கள் எல்லோரதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் இழப்பால் துடிக்கும்
அன்புக்குரிய இராசேந்திரம்(தந்தை),
லோகினிவதனா(வதனா- மனைவி),
கனியிசை(கனி- மகள்),கந்தசாமி குடும்பத்தினர்
மற்றும் உங்கள் அன்பான உறவுகள், நண்பர்கள்.
— மனைவி, மகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

