7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரம் கிருபாகரன்
வயது 345 மே, 1975 – 14 மே, 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் கிருபாகரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈருயிர் ஓருயிராக இணைந்த
இரண்டு ஆண்டுக்குள் என்னை
விட்டுச் சென்று விட்டீர்களே!
ஏன் அன்பே அப்படி
என்ன அவசரம் உங்களுக்கு?
அன்பான மாமியும் இல்லை
பாசமான மச்சாளும் இல்லை
உங்கள் பிள்ளை உங்களை
அப்பா என்று அழைப்பதற்கு
முன்பே சென்று விட்டீர்களே!
இன்று எங்கே என் அப்பா
என ஏங்குகிறதே அது
உங்களுக்கு கேட்கவில்லையா!
திரும்பவும் மீண்டும் இருவருக்கும்
மனிதப்பிறப்பு ஒன்று இருந்தால்
எனக்கு கணவராக கிடைக்க வேண்டும் அன்பே!
உங்கள் எல்லோரதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் இழப்பால் துடிக்கும்
அன்புக்குரிய இராசேந்திரம்(தந்தை),
லோகினிவதனா(வதனா- மனைவி),
கனியிசை(கனி- மகள்),கந்தசாமி குடும்பத்தினர்
மற்றும் உங்கள் அன்பான உறவுகள், நண்பர்கள்.
— மனைவி, மகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

