மரண அறிவித்தல்

In loving memory of
Ratnam Nadesu
Age 71May 2, 1948 – September 5, 2019
- Born in
- Uduppiddy
- Lived in
- Colombo, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரட்ணம் நடேசு அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையகுட்டி வெள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையகுட்டி நடேசு அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(கனடா), யோகநாதன்(கனடா), ஜெயநாதன்(ஜேர்மனி), விமலநாதன்(கனடா), திலகநாதன்(திலக்- கனடா), சிறீஸ்வரி(கனடா), இந்துநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரன்(கனடா), மஞ்சிதா(மஞ்சு- கனடா), சாந்தினி(ஜேர்மனி), மலர்(சிங்கப்பூர்), யாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவக்கொழுந்து(பட்டு- இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,
தர்மலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), பரமாநந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுரா(இலங்கை) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
சிந்துஜா- யுத்தன்ராஜ்(கனடா), சகானா(கனடா), அடானா(கனடா), ஜதுசன்(ஜேர்மனி), பானுஜன்(ஜேர்மனி), டாபினி(கனடா), லெவிசா(கனடா), ஜோட்ஸ்னா(கனடா), ஜஸ்வின்(கனடா), ஜாஸ்லின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ருத்வா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் எல்லங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

