Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Ratnasingam Parameswary

In loving memory of

Ratnasingam Parameswary

Age 81May 15, 1935 – October 16, 2016

Born in
Kangesanthurai
Lived in
Mullaitivu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் பரமேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

மாதம் ஒன்று சென்றதோ.!
ஆறவில்லை எங்கள் துயரம் அம்மா...!
தூக்கமின்றி எம்மையெல்லாம்
காத்து நின்றாய் அம்மா...
இடையூறு அத்தனையும்
எதிர்த்து நின்றாய் அம்மா!

பேதமற்ற பாசத்தையும் பகிர்ந்து நின்று
ஊக்கமுடன் கல்வியையும் ஊட்டிவிட்டு
நன் மக்களாய் எம்மை வளர்த்து விட்டு
சொல்லாமல் கொள்ளாமல் போனதென்ன!

காலத்தின் கோலம் எங்களிடம்
இருந்து பிரித்துவிட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்..
ஆகிவிட்டீர்கள் அம்மா....!!!

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், அவரது அடக்க ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் நினைவுதினம் 16-11-2016 புதன்கிழமை ஆகும்.

அவரது 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு 19-11-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் Eastown Banquet Halls 2648 Eglinton Ave E, Scarborough, ON M1K 2S3, Canada என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளூமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · October 17, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.