மரண அறிவித்தல்

In loving memory of
Rukmanidhevi balasuntharam
Age 83December 23, 1932 – May 24, 2016
- Born in
- Nainativu
- Lived in
- Nainativu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 2ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட உருக்குமணிதேவி பாலசுந்தரம் அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உமா(இந்தியா), பாமா(ஐக்கிய அமெரிக்கா), பதுமா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முத்துலெட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பாகரன்(இந்தியா), அன்பழகன்(ஐக்கிய அமெரிக்கா), சிவஹரன்((பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூவிதா, அபிஷேக், மனுநீதி, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரபை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2ம் வட்டாரம்,
நயினாதீவு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

