31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sanmukanathan Nadarajah
Age 69February 3, 1948 – July 17, 2017
- Born in
- Analaitivu
- Lived in
- Kili Vaddakachchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
பெற்றெடுத்து ஆளாக்கி
பெருவாழ்வை உருவாக்கி
கற்றவரும் உற்றவரும் போற்ற
கரைந்து உருகி
ஒளியேற்றிய உயிர்த் தீபமே !
மரணம் அழைக்கும் வரை
மகிழ்வாய் அணைத்தாய்
வாழ்வில் நாம் ஒளிர
மெழுகாய் கரைந்தாய்
உலகில் உறவில் உயர்வாக்கி
உமை கரைத்து உழைத்தாய் !
கவலை மறந்து மகிழ்ந்தாடுகையில் தெய்வமே !
எமை விட்டு ஏன் மறைந்தாய்?
பொய்கையாக வாழ்ந்த இல்லம்
பாலைவனமாகியதே !
நீங்கள் வளர்த்த பூச்செடியும்
கண்ணீரில் சிரிக்கின்றதே !
நீங்கள் இல்லா மனங்களெல்லாம்
களையிழந்து தவிக்கின்றதே துணையவரே !
எதிலும் துணிந்து உழைத்து உயர்ந்தவரே !
உயிர் அளித்த திருக்கொடையே !
உறவணைத்த குணமதியே ! மலர் முகமே !
நிலவொளிரே மாசற்ற ஒளிர் விளக்கே !
இறையடியில் பூமலராய்
என்றும் திருநிறையால் பூஜிக்க
பரம் பொருளிடம் சரண் புகுந்தோம்!
ஓம் சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

