20ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Saravanamuthu Manivannan
Age 25August 2, 1971 – May 26, 1997
- Born in
- Thunnalai North
- Lived in
- Schaffhausen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை வடக்கு போதராமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து மணிவண்ணன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணா மணி வண்ணா!
அண்ணா என என்னை அனுதினமும் அழைத்தவன்
எண்ணாதிருக்க இயலவில்லை- மனம்
அன்பான உன் பேச்சும்
அழகான புன்சிரிப்பும்
கண்முன்னே நிற்குதடா- மனதை
கனமாக ஆக்குதடா கனமாக ஆக்குதடா
மூவேழு ஆண்டுகள் முன்நோக்கி நகர்ந்தாலும்
ஏழேழு ஜென்மங்கள் மறக்குமா எம் நெஞ்சம்
கூவாத குயில்களாய் குவலயத்தில் வாழ்கின்றோம்
ஆடாத மயில்களாய் அனுதினம் சாகின்றோம்
ஐயா நீர் சென்று ஐம்பது ஆண்டாகிலும்
மெய்வருந்தி உமை நினைத்து
பூசிப்போம் சாந்திக்காய்
உமது ஆத்ம சாந்திக்காய்
உம் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

