1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sellaiya Thillainathan
Age 87September 9, 1929 – December 13, 2016
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Punkuduthivu 11th Ward, Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தில்லைநாதன் அவர்களிற்கு எமது ஈர விழிகளுடன் கூடிய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்த ஐயாவே!
குருநாதன் யோகர்சுவாமிகள் காட்டிய வழியில் நின்று
பார்போற்ற எங்களுக்கு வாழவழியமைத்துத்தந்த ஐயாவே!
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் இருந்தும்
ஆணிவேராக நீங்கள் இருந்ததனால் தான்
நாங்கள் வீழ்ந்து விடாது இருந்தோம் ஐயா!
விழுதுகள் நாம் விம்முகின்றோம் இன்று
நீங்கள் தில்லைக்கூத்தனின் திருவடியில் ஐக்கியமாகி
ஆண்டொன்று ஆனாலும் ஆறவில்லை
விழிகளில் கண்ணீர் இன்னும் காயவில்லை!
உங்களை இழந்த துயரத்தை பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
எங்களால் ஈடுசெய்ய முடியாது தவியாய் தவிக்கின்றோம் ஐயா!
காலங்கள் பல கடந்தாலும் மாறாது உங்கள் நினைவலைகள்!
உங்கள் ஆன்மா எல்லாம் வல்ல சிவகாமி சமேத தில்லைநடராஜப்பெருமானின்
பாதாரவிந்தங்களில் நித்திய சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
“ஆன்மா என்றென்றும் அழியாது”
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்..!
வீட்டு முகவரி:-
11ம் வட்டாரம்,
புங்குடுதீவு,
யாழ்ப்பாணம்.
— மனைவி, குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

