1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sellathurai Annamma
Age 78April 23, 1937 – March 4, 2016
- Born in
- Kandarodai
- Lived in
- Kandarodai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுடொன்று கடந்தாச்சு
உன் நினைவுகள் அது நீங்கவில்லை
கனவிலும் மறவாத உன்
முகம் தன்னைத் தேடுகின்றோம்......
சொந்தமென பலபேர் இருந்தாலும்
சொல்லி ஆற ஓர்மடி அது தாய் மடியே!
எம்மைச் சுமக்கையிலே சுகமாகச் சுமந்துவிட்டு
இன்று உன்னை உணருகையிலே
சுமையெனவிட்டுச் சென்றாயோ!
தன்னலமற்ற செயல்வடிவமாய்
அன்பினால் செதிக்கிய சிலையென
என் தாயெனும் விலைமதிப்பற்ற சிலையை
சிந்தையில் நினைக்கையில்.....
வலிசுமந்து விழி நனைந்து -எம்
இதயம் தன்னில் துயரலைவடிய
தவிக்கவிட்டுச் சென்றதும் ஏனம்மா!
ஊரோடு உறவாடி உற்றாரை
மனமுவர்ந்து வரவேற்று உவமைபல ௯றி
அவர்தம் செவி இனிக்கத் தெவிட்டாத கதைகள் பல ௯றி
விருந்தோம்பியனுப்பி வைத்த அன்னையே!
இன்று அவர்களும் சேர்ந்தல்லவா
நம்முடன் ஆறாத்துயரில் துடிக்கின்றனர்
இனி எங்குபோய்த்தேடினாலும்
கிடைத்துவிடாத எம் இதயக்கோவிலில்
வீற்றிருக்கும் அன்னையே!
எம்மையெல்லாம் விட்டுச்சென்று
ஓராண்டு கடந்து சென்றாலும்
எம்மைக்கடந்து செல்லும் காலமெல்லாம்
உம் நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்.
உங்கள் ஆத்மா அமைதியாக உறங்க
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உம் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

