Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathurai Karunanthasamy

In loving memory of

Sellathurai Karunanthasamy

Age 82March 26, 1934 – March 25, 2017

Born in
Valvettithurai
Lived in
Canada, Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கருணானந்தசாமி அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பாஞ்சலிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, மகேஸ்வரன்(கனடா), சத்தியா(ஓய்வுப்பெற்ற ஆசிரியை), தேன்மதி(ஜெர்மனி), தனலக்ஸ்மி(லண்டன்), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளியம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுரேந்திரன், காலஞ்சென்ற அன்ரனி தேவதாஸ், விஜயசுந்தரம், வரதராசன், ஜெயந்தி, அருணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லசாமி, புவிராஜசிங்கம், வசந்தாதேவி, ரமணகிரி, திருமலைதேவி, குமுதினி, சுரேஷ், காலஞ்சென்ற உஷாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகராசா, விஜயலக்ஸ்மி, லவமூர்த்தி, யோகநாதன், வசந்தராஜா, புஸ்பதயா ஆகியோரின் அன்புச் சகலனும்,

பார்ஹவி- சபேசன், மிரேஸ், வைஷாலி- அம்பிகைராஜ், எனோத், சங்கவி, சஜீத், நிரஞ்சன், அன்பகன், திலீபன், ஹாசினி, பகலவன், சுடரவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸோபிகா, யாதவ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 49, பாடசாலை வீதி,
மத்தியவீதி,
திருகோணமலை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.