நினைவஞ்சலி

In loving memory of
Sellathurai Puvanesvari
Age 69March 2, 1941 – March 3, 2010
- Born in
- Point Pedro
- Lived in
- Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை புவனேஸ்வரி அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி.
எம்மை அன்பாகவும் பண்பாகவும் பாசமுடன்
வாழவைத்த எங்கள் பாசமிகு அம்மாவே!
எங்களை பெற்றெடுத்த குலதெய்வமே!!
எங்களை பிரிந்து சென்றது ஏனம்மா?
நீங்கள் இல்லை என்பதை
எங்கள் மனம் ஏற்கவில்லை அம்மா.
பிரிவுகள் நீண்டு செல்கின்றது,
நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி
வருடம் ஒன்று போனதம்மா.
மெழுகுவர்த்தியாக நீங்கள் உருகி எம்மைக்காத்து
மேன்மையடைய வைத்த தெய்வமே!!
¨நீங்கள் இல்லாத வீடு ஒளியிழந்து விட்டதம்மா,
இங்கு எங்கள் பெற்ற கடன் முடிவதற்குள்
எங்குதான் சென்றீர்கள் தாயே!!
அங்கு நீங்கள் நலமாக வாழ்கிறீர்களோ?
உங்களைப் பிரிந்து மண்ணில்
நாம் புழுவாகத்துடிக்கிறோம் அம்மா!
ஒன்பது பேர் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தோம்,
வாழ்க்ககையின் காலச் சக்கரத்தில் சுழலுண்டு
ஒவ்வொரு திசையிலும் வாழ்ந்து வந்தோம்.
ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டுப் பயணிக்க
இன்று உன்னுடன் அறுவரை இழந்து
நாம் மூவர் மட்டும் மனமுடைந்து கலங்குகின்றோம்.
தேசம் விட்டு சென்று ஒரு நாள்
நேசத்துடன் குலவுவாய் என்றே காத்திருந்தோம்,
காலனவன் மோசம் செய்து
ஒரு வருடமாக கதறுவது கேட்கவில்லயா.
வாசம் போன மலராக வாடித்துடிக்கின்றோம்
சகோதரியே சேர்ந்திடுவாய் மறு பிறவியில்.
மாண்புடைய மைத்துனியே!
எம்மை விட்டு பிரிந்து ஒரு வருடம் சென்றுவிட்டது
மனம் கலங்கித் தவிக்கின்றோம்.
கனிவான முகமும் பாசத்தின் முகவரியாகவும்,
கருணையுடனும் வாழ்ந்த நினைவுகள்
கண்முன்னே வந்து எம்மை கலங்க வைக்குதே,
கடவுளிடம் சென்ற நீங்கள் சாந்தியடைய வேண்டுகிறோம்.
பெறாமக்கள், மருமக்கள் பெற்றபிள்ளைகள் என்று
பேதங்கள் இல்லாது எல்லோரும் என் மக்கள் என்று
எல்லோரையும் ஒரே போல் பாசம் காட்டும் ஒளிவிளக்கே,
இன்று உங்கள் ஒளி எங்கே?
இன் முகம் காட்டி எம்மை அரவணைத்த கைகள் எங்கே?
காலம் பல கடந்தாலும்
கணமேனும் உங்களை மறவோம்.
மண்ணுலகில் வாழ்ந்து ஒளிகாட்டியது போல்,
விண்ணுலகிலிருந்தும் இருளுடனே வாழ்கின்ற
எமக்கெல்லாம் நல்ல ஒளிகாட்டு தாயே.
எங்களுக்கு வாழ்வளித்த மாமியே
எங்கள் கனவில் அடிக்கடி வருகின்றீர்களே!
நீங்கள் உயிருடன் இருப்பதுபோல்
எங்கள் மனம் சொல்கின்றது
மீண்டும் நீங்கள் இவ்வுலகிற்கு வந்து
நிஜமாகவே எங்களுக்கு மகளாகப் பிறப்பீர்களா.
உங்களின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
எங்களுக்கு எல்லாமுமான அம்மம்மாவே!
எங்களைப் பெற்ற அம்மாவை
மம்மி என்று அழைப்போம்
உங்களையல்லவா அம்மா என்று அழைத்தோம்.
தினந்தோறும் காலையில் துயிலெழுப்பி,
பாடசாலை போகும்வரை உதவி செய்து
மாலையில் வீடு திரும்பும் எங்களை
இன்முகத்துடன் வரவேற்ற நீங்கள்
எங்கள் மத்தியில் இல்லையே அம்மம்மா,
எங்களை விட்டு பிரிந்தது ஏனம்மா?
அன்பான அப்பம்மாவே
"பேத்தி" என்று அழைத்தால்
சிறு பிள்ளை நான் துள்ளிக்குதித்து
சிட்டாக ஒடிவருவேனே,
நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்களே
பேரனாக, பேத்தியாக கட்டிலிலே
எம்மை தூங்கவைத்து பல கதைகள்
சொல்லுவீர்கள் என்றே காத்திருந்தோம்,
காத்திருந்த எங்களை கதறவிட்டு
கடவுளிடம் போனீர்களோ
உங்கள் அன்புக்கதை கேட்டு
அரவணக்க முடியாத பாவிகளாகிவிட்டோம்.
நல்ல சகோதரியாக, மைத்துனியாக, மாமியாக
பெரியம்மாவாக, சின்னம்மாவாக அம்மம்மவாக,
அப்பம்மாவாக, நல்ல நண்பியாக எமக்கு அன்புத்தாயாக
நல்ல வழிகாட்டியாக அனைவருக்கும் உற்ற உறவினராக
நாம் கண்ட தெய்வமாக எம்முடன் வாழ்ந்து
தெய்வமாகிய எம் அன்னையே
உங்களின் ஆத்மா சாந்தியடைய
எங்கள் நாச்சிமார் அம்மனை வேண்டுகிறோம்!!!
உங்கள் நிழலாடும் நினைவுகளுடன்;உங்கள் பிள்ளைகள்,மருமக்கள்,மைத்துனன்,சகோதரிமார்கள், பெறாமக்கள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
— கனகலிங்கம்(கனெக்ஸ்) - மகன்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

