நினைவஞ்சலி

In loving memory of
Sellathurai Singarasa
Age 78January 26, 1932 – October 30, 2010
- Born in
- Manipay
- Lived in
- Ariyalai Center
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமானிப்பாயைப் பிறப்பிடமாகவும் யாழ் அரியாலை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை சிங்கராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் அரவணைத்து
எம்மை சிறப்பாக வாழவைத்த
எம் தந்தையே
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் பசுமையான நினைவுகள்
என்றும் எம்மைவிட்டு அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...!!!
நன்றி நவிலல்
அமரர் செல்லத்துரை சிங்கராசா அவர்கள் இறைபதம் எய்திய துயர் நிலை அறிந்து வந்து உற்றதுயர் பகிர்ந்தவர்கள் எங்கள் துயரைத் தங்கள் துயராய் ஏற்று நின்று உதவி ஒத்தாசை புரிந்தவர்கள், இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்கள், அஞ்சலி துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டவர்கள், தொலைபேசி மூலம் துயர்பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், அந்தியேட்டி சபிண்டிகரண நிகழ்வுகளை திறம்படச் செய்து முடிக்க உதவிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
— என்றும் உங்கள் நினைவுகளுடன் மனைவி மகேஸ்வரி , பிள்ளைகள், மருமக்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

