1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selvarathinam Chandrarani
Age 54August 23, 1954 – July 5, 2009
- Born in
- Varany North
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசி்ப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சந்திரராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமான எங்கள் அம்மாவே!
ஆண்டொன்று ஓடிமறைந்ததுவோ நீங்கள் எம்மை பிரிந்து?
தாயாகி வந்த எம் தவமே வலிக்கிறது எம் நெஞ்சம்!
எவ்விடர் வரினும் சாயாத கோபுரமே!
கொடிய நோயினால் தாக்குண்டு வீழ்ந்துவிட்டீகளே ?
விதி செய்த சதியால் நாம் கதியற்று நிற்கின்றோம்.
இன்னல்கள் ஏதும் எமை அணுகாது காத்த அன்னையே!
மொட்டுக்கள் பூத்து குலுங்கும் வேளை தனிலே, ஏன்
பாதி வழியில் காலனவன் உம் வாழ்வை முடித்தான்?
உறவுகளை அன்புடன் அரவணைத்து உபசரித்தீர்,
அயலவர்களுக்கு ஆலமரமாய் நிழலளித்த உத்தமியே!
வெந்தணலில் வேகியதோ உங்கள் உடல் ?
ஒப்புவமை இல்லாத எம் அம்மாவே உந்தன்,
புன்முறுவலுறும் இன்முகம் காண எம் மனம் துடிக்கிறது!
தினம் தினம் இரத்த கண்ணீர் வடிக்கின்றோம்,
சொப்பனத்தில் வந்தேனும் ஒரு செய்தி செல்லுங்களேன்!
மறுஜென்மம் உண்டென்றால் மறுபடியும் வரவேண்டும்
எமக்கு அன்னையாய், அது வரையில் நீங்கள் வரைந்த
பாதையில் தொடருகிறோம் எங்கள் பயணத்தை................
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
காலமெல்லாம் உங்கள் பிரிவால் துயருறும், கணவர், மகன்மார், மகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

