ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்வரத்தினம் சந்திரராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வரத்தினம் சந்திரராணி

வயது 5423 ஆகஸ்ட், 1954 – 5 ஜூலை, 2009

பிறந்த இடம்
Varany North
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசி்ப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சந்திரராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமான எங்கள் அம்மாவே!
ஆண்டொன்று ஓடிமறைந்ததுவோ நீங்கள் எம்மை பிரிந்து?
தாயாகி வந்த எம் தவமே வலிக்கிறது எம் நெஞ்சம்!
எவ்விடர் வரினும் சாயாத கோபுரமே!
கொடிய நோயினால் தாக்குண்டு வீழ்ந்துவிட்டீகளே ?
விதி செய்த சதியால் நாம் கதியற்று நிற்கின்றோம்.

இன்னல்கள் ஏதும் எமை அணுகாது காத்த அன்னையே!
மொட்டுக்கள் பூத்து குலுங்கும் வேளை தனிலே, ஏன்
பாதி வழியில் காலனவன் உம் வாழ்வை முடித்தான்?
உறவுகளை அன்புடன் அரவணைத்து உபசரித்தீர்,
அயலவர்களுக்கு ஆலமரமாய் நிழலளித்த உத்தமியே!
வெந்தணலில் வேகியதோ உங்கள் உடல் ?

ஒப்புவமை இல்லாத எம் அம்மாவே உந்தன்,
புன்முறுவலுறும் இன்முகம் காண எம் மனம் துடிக்கிறது!
தினம் தினம் இரத்த கண்ணீர் வடிக்கின்றோம்,
சொப்பனத்தில் வந்தேனும் ஒரு செய்தி செல்லுங்களேன்!
மறுஜென்மம் உண்டென்றால் மறுபடியும் வரவேண்டும்
எமக்கு அன்னையாய், அது வரையில் நீங்கள் வரைந்த
பாதையில் தொடருகிறோம் எங்கள் பயணத்தை................
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

காலமெல்லாம் உங்கள் பிரிவால் துயருறும், கணவர், மகன்மார், மகள்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.