Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Sinnathurai Thangarasa

In loving memory of

Sinnathurai Thangarasa

Age 69December 1, 1947 – May 29, 2017

Born in
Achchuveli
Lived in
Kaddaipirai, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் 3ம் வட்டாரம், ஆஸ்பத்திரி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை தங்கராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் உருவான சித்தப்பாவே!
உங்கள் அன்பு முகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்க
எங்களை விட்டு நீங்கள் எத்தூரம் சென்றீரோ?
பெறாமக்கள் எமை பெற்றெடுத்த பிள்ளையை விட பேரன்புடனும்
பாசத்துடனும் தழுவி வளர்த்த உங்கள்
அன்பும் பாசமும் கலந்த கரங்கள் எங்கே?

எம் வாழ்வில் நடந்தேறிய ஒவ்வொரு நற்தருணங்களிலும்
இறைவனுக்கு அடுத்தபடியாக முன்னின்று வாழ்த்துக்களையும்
ஆசிகளையும் கூறும் எங்கள் பேரன்பின் வடிவான சித்தப்பாவே
உங்களை இனி என்று காண்போம் என எண்ணி ஏங்குகிறதே மனது

பெற்றெடுத்த பிள்ளைகளை விட பலகோடி அன்பு பாராட்டி
எமை கற்றவராய் உலகத்திலே வாழவைத்த தெய்வமே!
மண்ணிலே நாம் பெருமைமிக்கவராய் வலம் வர வேண்டும்
எனும் அறிவுரையை தினம் தினம் கூறி வழி நடத்தியவரே!
எம்மை வளமாக வளர்த்த நீங்கள் உங்கள் உடன் பிறப்பு
உறவுகளை விட்டு தூரமாக இறுதி வரை விலகினீரே!
எம்மோடு அன்பாக உறவாடி வளர்த்தீரே

எமக்குத் தந்தைப் பாசத்தைப் பன்மடங்காய்
வாரி வழங்கிய வள்ளல் நீரல்லோ!
இன்று உங்கள் பாசத்திற்காய் ஏங்கவிட்டு
எங்கு சென்று விட்டீர்கள் சித்தப்பா!

எம் சிறு வயது முதல் உங்கள் அன்பில்
உறவாடி வளர்ந்த எமக்கு- நாம்
உங்களோடிருந்த இத்தனை ஆண்டு காலங்களும்- நீங்கள்
எமக்கு காட்டித் தந்திராத உறவுகள் பலர்

உங்கள் உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்றதும்
உறவுமுறை பல சொல்லி உயிரற்ற உங்கள்முன்
உறவாட வந்து நின்றபோது வாயடைத்து நின்றோம் நாம்!

உண்மை என்றுமே உலகறியுமே!
இது என்றுமே புதிதல்லவே!!!
உங்கள் உள்ளம் என்றுமே வெள்ளைதானே
உயர்வான குணங்கள் பல கொண்டவரே
உதிரும் புன்னகை கொண்டு என்றுமே எம்
துன்பம் துடைக்கும் சித்தப்பாவே!

வசந்தகாலம் என்றால் அது
உங்களுடன் வாழ்ந்த காலம் தானே!
வாழ்க்கை என்பது இறைவன் அவன் வகுத்தவரை தானே!
இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் அன்பு முகம், பண்பு, பரிவு, பாசம் மாறாதே!

நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே!
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம்.

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 29-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 01-07-2017 சனிக்கிழமை அன்று எமது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன விருந்து உபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.17, Passage Des,
Forestiers,
93390 Clichy Sous Bois,
France.

— பெறாமக்கள்

Other notices

  1. Obituary · May 31, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.