மரண அறிவித்தல்

In loving memory of
Sinniah Veluppillai
Age 90April 14, 1927 – January 26, 2018
- Born in
- Eluthuvadduval South
- Lived in
- Eluthuvadduval South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். எழுதுமட்டுவாள் தெற்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா வேலுப்பிள்ளை அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். மருதங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சடையர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசகுமாரி, விஜயகுமாரி, நிர்மலாதேவி, சறோஜினி, சிவானந்தம், சிலோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம், கணபதிப்பிள்ளை, தங்கம்மா, வீரகத்தி, சிவசம்பு, அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சத்தியநாதன், தர்மலிங்கம், காலஞ்சென்ற பத்மநாதன், பாலறஞ்சன், பராசக்தி, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மேரி அக்னஸ்(பொன்னம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நளினி, சத்தியா, கோபிநாத், கஜேந்திரநாத், கார்த்திகா, பிரசன்னா, ரஜிந்தன், அருணன், பிரவீனா, பானுஷன், பிரிந்தா, வினோஜிதன், மிதுனன், நிரோஜன், நிறோஜா, நிதர்ஷன், நிருஷா, நிதர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஜித், அபிநயா, அஷ்வின், தீபிகா, அபிகேஷன், அதீசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

