10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Somasundaram Ladchumippillai
Age 78January 20, 1930 – July 22, 2008
- Born in
- Karainagar Kovalam
- Lived in
- Badulla Haputale
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், அப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஊர் மாறி போனாலும் உறவு தேடிவருவாய்!
வழி மாறி போனாலும் வகை சொல்லி நிற்பாய்!
திசை மாறி செல்லும் போது தெரு சொல்லி வருவாய்!
இப்போ நீ எந்த வழி சென்றாய் அம்மா?
அள்ளிவிட்ட உறவு அம்மா!
அணைத்து விட்ட கைகள் அம்மா!
சொல்லி விட்ட வார்த்தைகள் அம்மா!
தூக்கி விட்ட செயல்கள் அம்மா!
சொல்ல துடிக்கும் எந்தன் குரலில்
ஏங்கி தவிக்கும் இந்த நாளில்
எங்கு சென்றாய் எந்தன் தாயே?
கஷ்டத்திலும் நஷ்டத்திலும் சுமந்தாய் தாயே!
அன்னத்தையும் அன்பையும் ஊட்டினாய் தாயே!
அறிவையும் பண்பையும் புகட்டினாய் தாயே!
தாழ்வையும் புகழையும் எடுத்துரைத்தாய் தாயே!
இனிப்பையும் கசப்பையும் காட்டினாய் தாயே!
எளிமையையும் பண்பையும் புரிய வைத்தாய் தாயே!
இன்பத்தையும் துன்பத்தையும் சுமக்க வைத்தாய் தாயே!
இப்போ உறவையும் பாசத்தையும் பிரித்து விட்டானே காலன்
மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் என்றென்றும் நீ
அம்மாவாகவும் நான் மகனாகவும் வரவேண்டும் என வேண்டுகிறேன்.
உன் பிரியமான செல்லமகன் சூர்யா(சூரி- பிரான்ஸ்)
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

