1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Somasuntharam Paramasamy
Age 83July 7, 1931 – March 20, 2015
- Born in
- Inuvil
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் பரமசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கா நினைவில் ஓராண்டு
ஓராண்டும் பறந்தோடிப் போனதோ- நாமிங்கு
மெத்தவும் மேனியெழில்
காணாது கவல்கின்றோம்!
நித்தமும் நினைவலைகள்
நெஞ்சை நெருடுகையில்
ஆறுதல் சொல்லுவோர் யாருமில்லையப்பா!
வேலையிலிருந்து திரும்பிய அன்பு மகளோ
தந்தையின் கனிய முகம் காணாது
நித்தமும் ஏங்கித் தவிக்கின்றாள்!
தொலைபேசி சத்தத்தில் துள்ளி ஓடிவந்து
பேசும் எந்தையின் இனியகுரல்
கேளாது சின்னமகளும் வாடுகின்றாள்!
அறியாப் பருவத்தே உற்றதாயை இழந்தபோதும்
தந்தை தயவுடனே தளராது நாமிருந்தோம்!
தாயின் தயவின்றி தடுமாறிப் போகாமல்
தரணியில் நாம் சிறக்க நீங்கள்
காட்டிய வழிகளோ ஓராயிரம் அப்பா!
உங்கள் கண்மனிகளை சரியான ஓரிடத்தில்
சேர்ப்பித்த திருப்தியுடன் கடமை முடிந்ததென்று
அம்மாவிடம் சென்றீர்களா? எங்கள் அப்பா
நீவிர் இருவீரும் பெறுக என்றும் சாந்தி!
— புதல்விகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

