31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Somasuntharam Vyithiyalingam
Age 85November 24, 1931 – January 20, 2017
- Born in
- Vellampokkaddi
- Lived in
- Vellampokkaddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் வைத்திலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
செல்வம் நிறைந்து விளங்கும்
வெள்ளாம் போக்கட்டி மண்ணில்
சோமசுந்தரம் தம்பதியர்க்கு மூத்த புதல்வனாய்
வந்துதித்த செல்வத் திருமகனே!
பள்ளிப் பருவத்தில் பல கலையும் கற்று
பண்புடன் ஒழுக்க சீலராய் வாழ்ந்து
இல்லறத்தை நல்லறமாய் நடாத்தி
பண்பான மக்களைப் பெற்ற எம் தந்தையே!
அன்பின் சொரூபமாய் பாசத்தின் பொக்கிஷமாய்
எமை வளர்த்தெடுத்த எம் தந்தையே!
நம்மை எல்லாம் தவிக்க விட்டு
அம்மா சென்ற இடம் ஆலாய்ப் பறந்தனையோ?
பெற்ற பிள்ளைகள் பரிதவிக்க
பேரப்பிள்ளைகள் பதை பதைக்க
உற்ற உறவுகள் பேதலிக்க
உலகம் விட்டுச் சென்றதேனோ?
ஊருக்குப் பெரியவனாய் வலம் வந்தாய்
ஊரார் நலனில் உவகை கண்டாய்
ஊரார் உனக்காய்க் கதறி நிற்க
உம்பர் உலகம் ஏகினையோ?
ஊரின் பெருமரம் சரிந்ததால் ஊரே அழுகின்றது
பொதுநோக்கு மண்டபமும் ஏங்கித் தவிக்கின்றது
நீ நடந்த பாதையெல்லாம் நீறாய்ச் சுடுகின்றது
நின் மலர்முகம் காணாது மக்கள் பதைக்கின்றனர்
உத்தமன் எம் பிதா எமைப் படைத்து
அன்பு சொரிந்து வளர்த்தெடுத்து
எம் வாழ்வுக்காய் நின்னை மெழுகாக்கி
கல்வியோடு தகைமையான வாழ்வு தந்து
ஊர் உவந்தேத்த உற்ற நல்லறம் பேணி
சுத்தமான மனதுடன் தூய இறை பணியோடு
மக்கள் சேவை மகேசன் சேவையாக
சித்தமதில் திடங்கொண்டு சீராக வாழ்ந்து
வீடுபேறு கண்ட வித்தகனாம் எம் தந்தை
ஆத்மா சாந்திக்காய்
அனுதினம் போற்றும் நரசிங்க வைரவர் பாதம்
பணிந்து பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— ஜெயபாலன்(மகன்- சுவிஸ்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

