ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சோமசுந்தரம் வைத்திலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் வைத்திலிங்கம்

வயது 8524 நவம்பர், 1931 – 20 ஜனவரி, 2017

பிறந்த இடம்
வெள்ளாம்போக்கட்டி
வாழ்ந்த இடம்
வெள்ளாம்போக்கட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் வைத்திலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

செல்வம் நிறைந்து விளங்கும்
வெள்ளாம் போக்கட்டி மண்ணில்
சோமசுந்தரம் தம்பதியர்க்கு மூத்த புதல்வனாய்
வந்துதித்த செல்வத் திருமகனே!

பள்ளிப் பருவத்தில் பல கலையும் கற்று
பண்புடன் ஒழுக்க சீலராய் வாழ்ந்து
இல்லறத்தை நல்லறமாய் நடாத்தி
பண்பான மக்களைப் பெற்ற எம் தந்தையே!

அன்பின் சொரூபமாய் பாசத்தின் பொக்கிஷமாய்
எமை வளர்த்தெடுத்த எம் தந்தையே!
நம்மை எல்லாம் தவிக்க விட்டு
அம்மா சென்ற இடம் ஆலாய்ப் பறந்தனையோ?

பெற்ற பிள்ளைகள் பரிதவிக்க
பேரப்பிள்ளைகள் பதை பதைக்க
உற்ற உறவுகள் பேதலிக்க
உலகம் விட்டுச் சென்றதேனோ?

ஊருக்குப் பெரியவனாய் வலம் வந்தாய்
ஊரார் நலனில் உவகை கண்டாய்
ஊரார் உனக்காய்க் கதறி நிற்க
உம்பர் உலகம் ஏகினையோ?

ஊரின் பெருமரம் சரிந்ததால் ஊரே அழுகின்றது
பொதுநோக்கு மண்டபமும் ஏங்கித் தவிக்கின்றது
நீ நடந்த பாதையெல்லாம் நீறாய்ச் சுடுகின்றது
நின் மலர்முகம் காணாது மக்கள் பதைக்கின்றனர்

உத்தமன் எம் பிதா எமைப் படைத்து
அன்பு சொரிந்து வளர்த்தெடுத்து
எம் வாழ்வுக்காய் நின்னை மெழுகாக்கி
கல்வியோடு தகைமையான வாழ்வு தந்து
ஊர் உவந்தேத்த உற்ற நல்லறம் பேணி
சுத்தமான மனதுடன் தூய இறை பணியோடு
மக்கள் சேவை மகேசன் சேவையாக
சித்தமதில் திடங்கொண்டு சீராக வாழ்ந்து
வீடுபேறு கண்ட வித்தகனாம் எம் தந்தை
ஆத்மா சாந்திக்காய்
அனுதினம் போற்றும் நரசிங்க வைரவர் பாதம்
பணிந்து பிரார்த்திக்கின்றோம்!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

— ஜெயபாலன்(மகன்- சுவிஸ்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.