நினைவஞ்சலி

In loving memory of
Sornam
Age 45April 8, 1964 – May 15, 2009
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையில் பிறந்து, தமிழீழ மண்ணுக்காக தன்னுயிர்நீத்த மூத்த கட்டளை தளபதி சொர்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்.
பாசத்தின் பிறப்பிடமே
பண்பின் உறைவிடமே
வீரத்தின் வித்தே
இறுதிவரை களமாடிய
தியாகச்சுடரே
நாட்கள் மாதங்களாகியும்
மாதங்கள் வருடமாகியும்
மீளமுடியவில்லை எம்மால்
உங்கள் இழப்பிலிருந்து
எங்கள் வாழ்வு கசக்கிறது
உங்கள் இனிய மொழி கேட்காது
எங்கள் கண்கள் செருகிறது
கதிகலங்கி நிலைகுலைந்து நிற்கின்றோம்
எங்கள் கால்கள் வலிக்கிறது - உங்கள்
பாதச் சுவட்டின் தடயங்களைத் தேடித்தேடி
எங்கள் உணர்வுகள் தேடுகிறது
உங்கள் பரிசம் எங்கே என்று
காலங்கள் காயத்தையாற்றும் என்பார்கள் - ஆனால்
நீங்களோ காலத்தாலும் அழிக்கமுடியாத
காவியச் சுடர் ஆனீர்கள்
ஈழத்தின் விடிவிற்காய் தலைவனின்
கொள்கையின்படி மாவீரனாய்
மண்ணில் விதைந்த
எங்கள் இதயத் தெய்வமே
அழியாத நினைவுகளோடு
ஏங்கித் தவிக்கும் உறவுகள்
— அ.தனு ([email protected])
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

