நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொர்ணம்
மூத்த கட்டளை தளபதி
வயது 458 ஏப்ரல், 1964 – 15 மே, 2009
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையில் பிறந்து, தமிழீழ மண்ணுக்காக தன்னுயிர்நீத்த மூத்த கட்டளை தளபதி சொர்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்.
பாசத்தின் பிறப்பிடமே
பண்பின் உறைவிடமே
வீரத்தின் வித்தே
இறுதிவரை களமாடிய
தியாகச்சுடரே
நாட்கள் மாதங்களாகியும்
மாதங்கள் வருடமாகியும்
மீளமுடியவில்லை எம்மால்
உங்கள் இழப்பிலிருந்து
எங்கள் வாழ்வு கசக்கிறது
உங்கள் இனிய மொழி கேட்காது
எங்கள் கண்கள் செருகிறது
கதிகலங்கி நிலைகுலைந்து நிற்கின்றோம்
எங்கள் கால்கள் வலிக்கிறது - உங்கள்
பாதச் சுவட்டின் தடயங்களைத் தேடித்தேடி
எங்கள் உணர்வுகள் தேடுகிறது
உங்கள் பரிசம் எங்கே என்று
காலங்கள் காயத்தையாற்றும் என்பார்கள் - ஆனால்
நீங்களோ காலத்தாலும் அழிக்கமுடியாத
காவியச் சுடர் ஆனீர்கள்
ஈழத்தின் விடிவிற்காய் தலைவனின்
கொள்கையின்படி மாவீரனாய்
மண்ணில் விதைந்த
எங்கள் இதயத் தெய்வமே
அழியாத நினைவுகளோடு
ஏங்கித் தவிக்கும் உறவுகள்
— அ.தனு ([email protected])
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

