4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Subaajini Rajakopan
Age 29April 12, 1977 – August 25, 2006
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி(Nurenberg) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஜினி இராஜகோபன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்பக் குலவிளக்கே
உனை இழந்து வாழ்வோம் என்று
நாம் கனவிலும் எண்ணவில்லையே
எம் வீட்டின் மூத்தவளாய் வந்துதித்து
எம் வீட்டின் இருள் துடைத்தது - நீயல்லவா
தந்தையினை இழந்த போதும்
உன் பண்பான முகம்கண்டு தேர்ந்திருந்தோமே
நாம் ஒன்றாக வாழும் நேரம்
வரும் போது நீ - மட்டும்
எம் தந்தைக்குத் துணையாக சென்றுவிட்டாயே!!...
ஐயிரண்டு திங்களும் அங்கமெல்லாம் - நொந்து
ஈன்றெடுத்த இரட்டையரை காணாமல்
வண்ணக் கனவுகளோடு வலம்வந்த நாயகியே
விண்ணுலகம் சென்றாயோ விரும்பி விடை பெற்றாயோ
காலமெல்லாம் எங்களோடு மழலை - மொழி பேசி,
சிரித்து மகிழ்ந்த உங்கள் பொன்முகம்
காணாமல் போனதுவும் ஏனோ??
வந்தொரு மழலை மொழி பொழிந்திட - மாட்டீரோ???
என்று ஏங்கித் தவிக்கின்றோமே!!..
உனை எங்கு காண்போம் அக்கா
கண்ணினை இமைகாப்பது போல்
எம்மைக் காத்து இருந்தாயே - அக்கா
எம் வாழ்வில் உயர்வினை உண்டாக்க
நீ பட்ட பெரும் கஷ்டம் அறிவோம் - அக்கா
ஆண்டுகள் நான்கு ஆனாலும்
எமை ஈன்றவள் துயர் துடைக்க
முடியாமல் துடிக்கின்றோமே - அக்கா
நல்வாழ்வு எம்பக்கத்தில் வந்தபோது - நீ
மட்டும் போனாயே பெருந்தூரம்
இதுதான் விதியா.....
இல்லை இறைவனின் சதியா??...
— என்றும் உன் நினைவுடன் அம்மா, சகோதரிகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

