ஆறுதல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுபாஜினி இராஜகோபன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுபாஜினி இராஜகோபன்

வயது 2912 ஏப்ரல், 1977 – 25 ஆகஸ்ட், 2006

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி(Nurenberg) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஜினி இராஜகோபன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் குடும்பக் குலவிளக்கே
உனை இழந்து வாழ்வோம் என்று
நாம் கனவிலும் எண்ணவில்லையே
எம் வீட்டின் மூத்தவளாய் வந்துதித்து
எம் வீட்டின் இருள் துடைத்தது - நீயல்லவா
தந்தையினை இழந்த போதும்
உன் பண்பான முகம்கண்டு தேர்ந்திருந்தோமே
நாம் ஒன்றாக வாழும் நேரம்
வரும் போது நீ - மட்டும்
எம் தந்தைக்குத் துணையாக சென்றுவிட்டாயே!!...

ஐயிரண்டு திங்களும் அங்கமெல்லாம் - நொந்து
ஈன்றெடுத்த இரட்டையரை காணாமல்
வண்ணக் கனவுகளோடு வலம்வந்த நாயகியே
விண்ணுலகம் சென்றாயோ விரும்பி விடை பெற்றாயோ
காலமெல்லாம் எங்களோடு மழலை - மொழி பேசி,
சிரித்து மகிழ்ந்த உங்கள் பொன்முகம்
காணாமல் போனதுவும் ஏனோ??
வந்தொரு மழலை மொழி பொழிந்திட - மாட்டீரோ???
என்று ஏங்கித் தவிக்கின்றோமே!!..

உனை எங்கு காண்போம் அக்கா
கண்ணினை இமைகாப்பது போல்
எம்மைக் காத்து இருந்தாயே - அக்கா
எம் வாழ்வில் உயர்வினை உண்டாக்க
நீ பட்ட பெரும் கஷ்டம் அறிவோம் - அக்கா
ஆண்டுகள் நான்கு ஆனாலும்
எமை ஈன்றவள் துயர் துடைக்க
முடியாமல் துடிக்கின்றோமே - அக்கா
நல்வாழ்வு எம்பக்கத்தில் வந்தபோது - நீ
மட்டும் போனாயே பெருந்தூரம்
இதுதான் விதியா.....
இல்லை இறைவனின் சதியா??...

— என்றும் உன் நினைவுடன் அம்மா, சகோதரிகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.