1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Subathra Maheswaran
Age 58June 3, 1950 – September 30, 2008
- Born in
- Vannarpannai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பெருமாள் கோவிலடி 447, மணிக்கூட்டு வீதியில் பிறாந்தவரும் பிரான்ஸ் டம்மேரியில் வாழ்ந்தவருமாகிய அமரர் சுபத்திரா மகேஸ்வரன் அவர்களின் நீங்காத துயரின் ஓராண்டு நினைவலைகள்.
மானிடராய் பிறந்ததன் மகிமைதனை தானுணர்ந்து
ஊனினை உருக்கி எமக்காய் உழைத்து வந்து
அளப்பரிய பணிகளை செவ்வனே செய்து
எம்மை எல்லாம் ஆளாக்கிய
குடும்பத்தின் குலவிளக்காய் திகழ்ந்த
எம் அக்கா எம்மை விட்டுப் பிரிந்து
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஐயகோ எம் துன்பம் ஆறாது! ஆறாது!
எழுந்தோடி எம்கண்முன் வந்து நிற்பீரோ
ஏங்குகிறது எம் உள்ளங்கள்
நிறைவான செல்வம் நீங்கள் பெற்றவர்களையும்
கரம்பிடித்தவரையும் கூடப்பிறந்தவர்களையும்
மைத்துனர் மைத்துனிகளையும் பெறாமக்களையும்
மருமக்களையும் மற்றும் உறவுகளையும்
தவிக்கவிட்டுச் சென்ற உங்களை
எப்போ நாம் காண்போம்
புன்முறுவல் பூக்க இன்முகம் காட்டி
எம்மை அரவணைத்த தெய்வமே!
உங்களை இப்பூமியில் எப்போ நாம் காண்போம்
நித்தமும் பெற்றவர்களுக்கு சொல்கின்றோமே ஆறுதல்
ஆறவில்லையே அம்மாவின் துயரம்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று
தெரியாது கலங்கி நிற்கின்றோம்
எல்லா நினைவுகளும் நீங்களாகி
உங்கள் உயிருள்ளவரை வாழ்ந்தீர்கள்
எம் உயிருள்ளவரை நாம் மறவோம்
பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனிடம் வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— உங்கள் உயிரின் உறவுகள்: அம்மா, கணவர், சகோதர சகோதரிகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

