ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுபத்திரா மகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுபத்திரா மகேஸ்வரன்

யாழ்/பல நோக்கு கூட்டுறவு கிராமிய முன்னாள் வங்கி முகாமையாளர்

வயது 583 ஜூன், 1950 – 30 செப்டம்பர், 2008

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பெருமாள் கோவிலடி 447, மணிக்கூட்டு வீதியில் பிறாந்தவரும் பிரான்ஸ் டம்மேரியில் வாழ்ந்தவருமாகிய அமரர் சுபத்திரா மகேஸ்வரன் அவர்களின் நீங்காத துயரின் ஓராண்டு நினைவலைகள்.

மானிடராய் பிறந்ததன் மகிமைதனை தானுணர்ந்து
ஊனினை உருக்கி எமக்காய் உழைத்து வந்து
அளப்பரிய பணிகளை செவ்வனே செய்து
எம்மை எல்லாம் ஆளாக்கிய
குடும்பத்தின் குலவிளக்காய் திகழ்ந்த
எம் அக்கா எம்மை விட்டுப் பிரிந்து
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஐயகோ எம் துன்பம் ஆறாது! ஆறாது!
எழுந்தோடி எம்கண்முன் வந்து நிற்பீரோ
ஏங்குகிறது எம் உள்ளங்கள்

நிறைவான செல்வம் நீங்கள் பெற்றவர்களையும்
கரம்பிடித்தவரையும் கூடப்பிறந்தவர்களையும்
மைத்துனர் மைத்துனிகளையும் பெறாமக்களையும்
மருமக்களையும் மற்றும் உறவுகளையும்
தவிக்கவிட்டுச் சென்ற உங்களை
எப்போ நாம் காண்போம்
புன்முறுவல் பூக்க இன்முகம் காட்டி
எம்மை அரவணைத்த தெய்வமே!
உங்களை இப்பூமியில் எப்போ நாம் காண்போம்

நித்தமும் பெற்றவர்களுக்கு சொல்கின்றோமே ஆறுதல்
ஆறவில்லையே அம்மாவின் துயரம்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று
தெரியாது கலங்கி நிற்கின்றோம்
எல்லா நினைவுகளும் நீங்களாகி
உங்கள் உயிருள்ளவரை வாழ்ந்தீர்கள்
எம் உயிருள்ளவரை நாம் மறவோம்

பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனிடம் வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— உங்கள் உயிரின் உறவுகள்: அம்மா, கணவர், சகோதர சகோதரிகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.