மரண அறிவித்தல்

In loving memory of
Subramaniyam Pushpaleelavathi
Age 72November 6, 1943 – May 30, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Puttalam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புஸ்ப்பலீலாவதி அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சத்தியசீலன், பத்பசீலன்(ஜெர்மனி), குகசீலன்(இலங்கை), உதயசீலன்(சுவிஸ்), சுபாஜினி(அவுஸ்திரேலியா), சுதர்ஜினி(சுவிஸ்), வைகுந்தவாசினி, மதுரவாணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சின்னராசா, மற்றும் பரமேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), சந்திரமோகனதாசன்(சுவிஸ்), ராம்குமார்(இலங்கை), அஜந்தினி(ஜெர்மனி), சாந்தினி(இலங்கை), காந்தா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஸ்மிதா, சுலக்ஸ்மி(அவுஸ்திரேலியா), வைஸ்சவி(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
லேனுசா, கிருஷ்சா, லக்சனா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக இல. 43/1 முதலாவது ஒழுங்கைவான் வீதி, புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 02-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புத்தளம் தில்லையடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

