மரண அறிவித்தல்

In loving memory of
Sundaramoorthy Ruthirakumaran
Age 68July 19, 1947 – February 7, 2016
- Born in
- Thondaimanaru
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி உருத்திரகுமாரன் அவர்கள் 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகள் மற்றும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி(மலாயன் பென்சனியர்) மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி(ஸ்தாபகர்- சுந்தரமூர்த்தி & சன்ஸ்) கமலாம்பாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
சிவபாலன்(சுவிஸ்), காலஞ்சென்ற மகாதேவன், கிரிஜா(லண்டன்), பிரேமலதா(லண்டன்), இராஜரட்ணகுமாரன்(லண்டன்), சுதாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 210,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

