31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Thambipillai Thirunavukkarasu
Age 76August 10, 1939 – March 27, 2016
- Born in
- Velanai
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
விழிநீர் அஞ்சலி
ஓய்ந்திடுமா ஐயா! எங்கள் கண்ணீர்த்துளி
உங்கள் நினைவுகள் உயிர்த்துளிகளாய்
இனி எங்கள் இதயங்களில்
உள்ளமது உறங்காது உணர்வுடன் போராடி
உறைவிடம் நீ தேடிச் சென்றாயோ?
பற்றும் பாசமது நட்போடு பகிர்ந்தளித்த
உன் அன்பு முகம் மறப்போமா?
பொய்யான வாழ்வை விட்டு
புறப்பட்டுப் போனாயோ எங்கள் ஐயா?
சிறுவர் முதல் பெரியோர்வரை உறவு சொல்லி
உன் அன்பால் அணைத்துக் கொண்டவனே!
தளராத அன்பை நீ தந்ததினாலா?
காலன் அவன் கண்பார்வை உன்மீது பட்டதய்யா!
காலத்தின் ஏடுதனை உன் வாழ்வு முடித்ததய்யா!
காலம் செய்த கோலம் என்ன அந்த
இறைவனுக்கும் இரக்கமில்லை!
ஆலமரம் சாய்ந்ததய்யா அதன்
விழுதுகள் இனித் தாங்கிடுமா?
கூடு ஒன்று சிதைந்ததய்யா சிறு குருவிகள்
தவிக்குதையா ஆலமரம் இல்லாமல்!
யார் துணை வந்தாலும்
ஈடு செய்ய முடியாது
உன் நினைவது வற்றாது!
மாலையிட்ட மனையாள் மாரடித்து அழுகின்றாள்
அன்பு அப்பா முகம் இனி எப்பவரும்
என உன் பிள்ளைகள்
துடித்து நிற்க வாழ்ந்தது போதும் என்றா
திருநாவுக்கரசு ஐயா!
நீ அனைவரையும் கதறவைத்தாய்
ஏனய்யா அந்த பாழாய் போன காலனிடம்
அந்த ஆண்டவனும் தோற்றானே?
உன் ஆசை முகம் மறக்குமா ஐயா!
உதிர்வு உன் உடல் கண்டது
உன் உணர்வுகள் என்றும் எம் நெஞ்சத்தில்
உன் இருப்பிடம் இனி எம் இதயத்தில்....
அன்னாரின் துயரச் செய்திகேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறி எம் துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கும், சகல வழிகளிலும் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு 01- 05- 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை சுவிஸ் Bern ஶ்ரீகல்யாண சுப்பிரமணியர் ஆலயம், Gürbestrass 7/9, 3125, Toffen, Swiss என்னும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

