மரண அறிவித்தல்

In loving memory of
Thambirai Arulanantham
Age 73December 29, 1937 – January 30, 2011
- Born in
- Urumpiray
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஉரும்பிராயை பிறப்பிடமாகவும், வீமன்காமம் தெல்லிப்பிழையை வதிவிடமாகவும், கொழும்பில் தற்காலிகமாக வசித்து வந்தவருமாகிய தம்பாப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
பிரதீபா(லண்டன்) அவர்களின் அன்பு தந்தையும்,
கஜன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
தங்கலட்சுமி, காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், அகிலாண்டேஸ்வரி, இராயேந்திரன், பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான இராயேஸ்வரி, சுந்தரேஸ்வரி, சண்முகதாசன் மற்றும் முருகதாஸ்(நில அளவையாளர் திருகோணமலை) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் செவ்வாய்க்கிழமை 01-02-2011 அன்று கொழும்பு கல்கினசுயில் உள்ள Mahinda மலர் நிலையம் என்ற இடத்தில் பி.ப 2.00மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

