1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thampaiah Somasundram
Age 74March 15, 1934 – January 29, 2009
- Born in
- Kokkuvil West
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் கனடா மிஸ்சிஸ்சாகாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படுவர்." - திருக்குறள் -
ஆண்டு ஒன்றாயினும் அப்பா
உங்கள் நினைவு எம்
நெஞ்சத்தில் அகலாது நிற்கிறது
பாலோடு சோறூட்டி
பாசத்தையும் சேர்த்தூட்டி
அன்போடு கல்விதனை எமக்கூட்டி
பார் போற்றும் பண்பாளராய்
எமை வளர்த்தீர்களே அப்பா
எம் விழிகளில் நீர் சொரிய விட்டு
விரைந்து சென்றீர்களே - அப்பா
இப்பூவுலகில் உங்களின் பணி
இனிக் காணும் என்று
இறைவன் பாதம் பணிபுரியச் சென்ற
எங்கள் அன்புத் தெய்வமே
இனியெங்கு காண்போமோ
அந்த இன்முகத்தை அப்பா
ஆணிவேரினை இழந்து தவிக்கும்
உங்கள் விழுதுகள் நாம்
— உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

