1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thanabalasingam Thiyagaraja
Age 52April 24, 1961 – March 1, 2014
- Born in
- Eluvaitivu
- Lived in
- Essen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். எழுவைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடன் இல்வாழ்வில் அகவை பத்தொன்பது
இன்புற வாழ்ந்து செய்வனவெல்லாம் திருந்தச்செய்து
சேயவர் சிரிக்கச் செய்தும் நாட்கள் வாரங்கள்
மாதங்களாகி ஓராண்டு உருண்டோடி விட்டதப்பா!
ஆயிரம் பேர் ஆறுதலில் ஆறினாலும்
உங்கள் பிரிவை நெஞ்சம் மறுக்குதப்பா
நேற்றுப்போல் இருக்கிறது
நாங்கள் வாழ்ந்த இன்பவாழ்க்கை
நினைவுகள் யார் கண்பட்டதோ?
எங்கள் குருவிக்கூடு கலைந்தது
அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா
என்னுயிர் அப்பா வந்துவிடுங்கோ
ஏங்கி நாம் தவிக்கின்றோம் காலத்தின் கட்டளையா?
நோயின் காவுதலா? கண்விழித்து மூடும் முன்
காலன் உங்களை கவர்ந்தானோ அப்பா
சிப்பிக்குள் ஒரு முத்தென அன்பு அமுதூட்டி
கண்ணின் இமைப்போல் காத்து வளர்த்த
என் செல்ல அப்பா ஓடி வாருங்கள்
உங்கள் அன்பிற்காய் நான் என் அம்மாவுடன்
திக்கித் தவித்துச் சிந்தை கலங்கி நிற்கின்றேன்
பக்குவமாய் பெற்று வளர்த்த உங்கள் அம்மா
பாதியில் பறிகொடுத்து பரிதவித்து நிற்கின்றாளே
உடன் பிறந்தோர்கள், மச்சான், மச்சாள்மார், தம்பி, தங்கைமார்,
உற்றார், உறவினர் யாவரையும்
கண் நிறைந்த நீரோடு விட்டுக் கானல் வழி போனதேனோ?
மாமி, மாமி என்று அன்பு மழை பொழிந்ததும் இல்லாது
நீங்கள் போன பாதையைக் கூட ரகசியமாகக் கூறி
ஒரு மாதத்தில் அழைத்துச் சென்ற அப்பா!
ஏன் எங்களுக்குச் சொல்ல மறந்து சென்றீர்கள்
உங்கள் அன்பான சிரிப்பையும், பண்பான வார்த்தையையும்
எந்த ஜென்மத்தில் நாங்கள் கேட்பதப்பா
என் ஆருயிர் அப்பா நீங்கள் வரமாட்டீர்கள் என்று தெரிந்தும்
என் இதயம் கருகி இமைகள் நனைகிறது உங்கள் நினைவால்
அன்புத் தெய்வம் என் அப்பா நீங்கள் கனவில் வரும்
ஒவ்வொரு வேளையும் அளவு மீறிய ஆனந்தத்தில் தூங்குவேன்
விடிந்தும் விடியாதது போலாகி என் மனம் தவிக்குதப்பா
நீங்களும் எங்களை வெறுக்கவில்லை
நாங்களும் உங்களை மறக்கவில்லை
அனுதினமும் நினைத்து நினைத்து எண்ணித் தவிக்கின்றோம்
நோயின் கொடுமை எதிர்த்த நோன்பாம்
உங்கள் விடாமுயற்சி நீண்டு வாழவைத்தது
எம் மனதில் அழியாச் சித்திரம் அன்பான என் செல்ல அப்பா
அமைதி அடையுங்கள் ஆண்டவனருகில் இருந்து
என் அம்மாவையும், என்னையும் தனியே விட்டுச் சென்றாலும்
என் அப்பா உங்கள் அன்பாலும், ஆசீர்வாதத்தாலும்
எங்களை வழி நடத்துங்கள் என் அப்பா
ஓம் சாந்தி.! ஓம் சாந்தி.! ஓம் சாந்தி.!
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 19-02-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அதனைத் தொடர்ந்து மதிய போசன நிகழ்வு நடைபெறும்.
மேலும் 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று Schmitz Str. 8, 45143 Essen, Germany எனும் மண்டபத்தில் பிரார்த்தனையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

