மரண அறிவித்தல்

In loving memory of
Thevarajah Gnanambikai
Age 85June 8, 1933 – October 11, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவராஜா ஞானாம்பிகை அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(காரைநகர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம்(காரைநகர் வலந்தலை இலகடி), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராஜா(இளைப்பாறிய தலைமை முகாமையாளர்- இ.போ.ச) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரான்ஸைச் சேர்ந்தவர்களான தேவஞானன், தேவமனோகரன், தேவசுரேந்திரன், தேவப்பிரியன், தேவநரேந்திரன், தேவகாந்தன், சந்திரவதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், வடிவாம்பிகை, யோகாம்பிகை, நீலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரான்ஸைச் சேர்ந்தவர்களான சுசீலா, சசிகலா, ராதிகா, செல்வகுமாரி, கௌசலாதேவி, சற்குணராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவசம்பு, விஸ்வலிங்கம், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், மகாராணி, சண்முகராசா, ஸ்ரீகாந்தன் மற்றும் பரராஜசிங்கம், நாகேஸ்வரி, ரத்தினேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரபேசன், தர்சிகா, சுலோசன், பிரவீன், ரொனி, ரெரி, பிரணவி, பிரகவி, பிரனிதா, ஆதிரன், அக்ஷாயி, அக்ஷணா, ஜூலி, பிரதீப், பிருத்துவி, பிரகன், பிரகலன் ஆகியோரின அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பார்வை நேரங்களை Thushiyanthan Thevarajah, Thevamanokaran Thevarajah ஆகிய Facebook மூலம் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

