Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Vallipuram Balasuntharam

In loving memory of

Vallipuram Balasuntharam

Age 74September 15, 1940 – November 22, 2014

Born in
Chavakachcheri
Lived in
Kili Kandavalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த எம் தெய்வமே...

கைப்பிடித்த நாள் முதலாய் கண்னை
இமைகாப்பது போல் எம்மை காத்து வந்தீரே!

நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்

பெற்ற பிள்ளைகள் எங்கள் நல்வாழ்விற்காய்
பெரும்பாடுபட்ட அன்பு அப்பாவே

அன்பாக கல்வியூட்டி, வாழ வழிகாட்டி,
தக்கதுணை தேடி தரணியிலே வாழவைத்தவரே

உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா

மீண்டும் ஒரு பிறவி உண்டு என்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும் பேறு பெறவேண்டும்

நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்

ஓராண்டு என்ன ஒருயுகம் கழிந்தாலும்
உங்கள் பிரிவை எங்களால் தாங்கமுடியாது

உங்கள் ஆத்மா சாந்தி பெற என்றும்
அன்புடன் தொழுது வேண்டுகின்றோம்

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.