மரண அறிவித்தல்

In loving memory of
Valliyammai Saravanamuthu
Age 92July 5, 1923 – December 5, 2015
- Born in
- Madduvil
- Lived in
- Madduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பூநகரி மட்டுவில் நாட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
நடராஜா, வல்லிபுரநாதன், மங்கையற்கரசி, காலஞ்சென்ற பூரணம், திருநாவுக்கரசு(ஜெர்மனி), குணரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், கணேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேதுராணி, லீலாவதி, காலஞ்சென்ற சின்னத்துரை, காலஞ்சென்ற சுப்பிரமணியம், குணவதி(ஜெர்மனி), அற்புதராணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

