Aruthal

41ம் நாள் நினைவஞ்சலி

Photo of Vellupplai Kandasamy

In loving memory of

Vellupplai Kandasamy

Age 66April 22, 1949 – November 24, 2015

Born in
Mayiliddi
Lived in
Dillenburg

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dillenburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இருப்பிடமாய் பாசத்தின் உறைவிடமாய் குடும்பத்தின் குல விளக்காய் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்து இன்று எங்களை விட்டு நீங்கி நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் வேலுப்பிள்ளை கந்தசாமி
அவர்களின் இறுதிக்கிரியைகளின் போது ஜெர்மனி, கனடா, சுவிஸ், பரிஸ் லண்டன், கொலண்ட், சுவீடன், டில்லின் பேர்க் ஆகிய இடங்களில் இருந்தும், மேலும் மற்றைய இடங்களில் இருந்து நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல், இமெயில் ஆகிய அனைத்து வழிகளாலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், உடனிருந்து உதவி புரிந்தவர்களுக்கும், அன்னாரின் தகனக்கிரியை மற்றும் அந்தியேட்டிக்கிரியைகளின் போதும் வேண்டிய உதவிகளை காலமறிந்து செய்த அயலவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
Dofgemeinschaftshause,
Mühlgasse,
35687 Dillenburg (Niederscheld),
Germany.

— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.