1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vijayananthan Kajeepan
Age 28March 27, 1981 – January 17, 2010
- Born in
- Kilinochchi
- Lived in
- Basel-City
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி ஜெயந்திநகரை பிறப்பிடமாகவும் சுவிஸ் Basel நகரை வதிவிடமாகவும் கொண்ட விஜயானந்தன் கஜீபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதடா மகனே!
அனலில் இட்ட புழுவாய்
அலறித் துடிக்கின்றோம்.
ஆற்றுங்கள் துயரை என்று
அயலவர் கூறுகின்றார்.
மாண்டார் வருவாரோ
என்று மற்றவர்கள் கேட்கின்றார்.
பெற்றவர்கள் நாம் படும்பாட்டை
மற்றவர்கள் யார் அறிவார்?
ஆற்றுவார் யாரும் இல்லை ஐயா.
தேற்றுவார் தேற்றுகின்றார்.
திரவியமே நீ இல்லாமல்
தேற முடியவில்லையே மகனே.
பெற்ற வயிறு பற்றி எரியுதையா...
துன்பமே தொடர்க்கதையாய்
தொடர்ந்து வந்த எங்களுக்கு
இன்பமாய் வந்தவனே,
இன்பத்தைத் தந்தவனே.
இனி நீ இல்லையென்று
இனியும் நாம் எண்ணமாட்டோம்.
காலங்கள் கடந்து காலனவன்
எமை அழைத்து
உன்னிடத்தில் நாம் வரும்வரைக்கும்
எம்மிடத்தில் நீ இருப்பாய்!!..
உன் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டுகின்றோம்.
— பெற்றோர், சகோதரர்கள், மனைவி, மக்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

