1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயானந்தன் கஜீபன்
வயது 2827 மார்ச், 1981 – 17 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- Basel-City
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி ஜெயந்திநகரை பிறப்பிடமாகவும் சுவிஸ் Basel நகரை வதிவிடமாகவும் கொண்ட விஜயானந்தன் கஜீபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதடா மகனே!
அனலில் இட்ட புழுவாய்
அலறித் துடிக்கின்றோம்.
ஆற்றுங்கள் துயரை என்று
அயலவர் கூறுகின்றார்.
மாண்டார் வருவாரோ
என்று மற்றவர்கள் கேட்கின்றார்.
பெற்றவர்கள் நாம் படும்பாட்டை
மற்றவர்கள் யார் அறிவார்?
ஆற்றுவார் யாரும் இல்லை ஐயா.
தேற்றுவார் தேற்றுகின்றார்.
திரவியமே நீ இல்லாமல்
தேற முடியவில்லையே மகனே.
பெற்ற வயிறு பற்றி எரியுதையா...
துன்பமே தொடர்க்கதையாய்
தொடர்ந்து வந்த எங்களுக்கு
இன்பமாய் வந்தவனே,
இன்பத்தைத் தந்தவனே.
இனி நீ இல்லையென்று
இனியும் நாம் எண்ணமாட்டோம்.
காலங்கள் கடந்து காலனவன்
எமை அழைத்து
உன்னிடத்தில் நாம் வரும்வரைக்கும்
எம்மிடத்தில் நீ இருப்பாய்!!..
உன் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டுகின்றோம்.
— பெற்றோர், சகோதரர்கள், மனைவி, மக்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

