2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vijitha Pavalaraja
Age 36August 23, 1982 – September 8, 2018
- Born in
- Naranthanai
- Lived in
- Sens
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனைவியாக வந்த
மங்கள விளக்கு நீயம்மா
நல்லறமாய் வாழ்ந்து காட்டிய
என் விழிச்சுடரே
தப்பேதும் செய்திட்டால்
அறிவுரைகள் பலகூறி
தளர்வு தீர்த்த தலைவி நீ
காக்கின்ற தெய்வம்
கைவிட்டு போனபோல்
காலனவன் உங்கள் உயிரை
பறித்துப் போனதனால்
கயிறறுந்த பட்டமாய்
கலங்குகின்றோம்
உன் நினைவு வேல்போல்
வந்து வெந்த புண்ணில் குத்துதம்மா
வருடமிரண்டு வந்தாலும்
உன்குரல் கேளாது
வாசம் கொண்ட நம் இல்லம்
இருளாய் போனதம்மா
தேற்றுவார் இல்லாமல்
தேம்பி அழுகின்றோம்
குதூகலம் இடிந்து
தவிக்க விதியாச்சே
முத்தமிட்ட அழகு முகம்
காணத் தவிக்கின்றோம்
நீர் அணைந்து ஈராண்டு
ஓடி மறைந்தாலும்
உன் ஒளிமுகத்தை முன்நிறுத்தி
என்றும் உன்நினைவுடனே
வாழுகின்றோம்.
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
— கணவர், பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

