4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vinasithambi Kunjithapatham
Age 54November 9, 1958 – January 22, 2013
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Vavu Omanthay, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வினாசித்தம்பி குஞ்சிதபாதம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
தப்பு செய்தால் தண்டித்து
தவறு செய்தால் மன்னித்து
தந்தைக்கெல்லாம் முன்னுதாரணமாய்
தரணியில் இருந்தவர் நீங்களே!
அம்மாவுக்கு ஒரு நல்மகனாய்
உடன் பிறப்புகளுக்கு நல்லதோர் வழிகாட்டியாய்
மனைவிக்கு சிறந்த கணவனாய்
பிள்ளைகளுக்கு நல்லதொரு அப்பாவாய்
திகழ்ந்தவர் நீங்களே!
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா!
என்று காண்போமோ அப்பா!!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்பா
அழியாது உங்களோடு நாம் வாழ்ந்த காலங்கள்
அதை நெஞ்சில் எண்ணியே வாழ்ந்திடுவோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், தாய், சகோதர, சகோதரிகள்,
மாமா, மாமி, மைத்துனர், மைத்துனிமார்கள், மருமக்கள்
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

