மரண அறிவித்தல்

In loving memory of
Visvanatha Iyar Jampunathan
Age 57December 20, 1958 – December 22, 2015
- Born in
- Tellippalai
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாத ஐயர் ஜம்புநாதன் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாத ஐயர்(சங்கீத வித்துவான்) அர்த்தநாரீஸ்வரி அம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுந்தரக்குருக்கள், பர்வதாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்தானலக்ஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,
அர்த்தனா, சங்கீர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரம்மஸ்ரீ விஸ்வநாராயண சர்மா, கோகிலாம்பாள், வனஜாம்பாள், சாரதாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-12-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரல்ல ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

