மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஸ்வநாத ஐயர் ஜம்புநாதன்
இசைக்கலைமணி, மிருதங்க வித்துவான், கட்புல அரங்கேற்று பல்கலைக்கழகம்- University Of Visual and Performing Arts மிருதங்க விரிவுரையாளர்
வயது 5720 டிசம்பர், 1958 – 22 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாத ஐயர் ஜம்புநாதன் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாத ஐயர்(சங்கீத வித்துவான்) அர்த்தநாரீஸ்வரி அம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுந்தரக்குருக்கள், பர்வதாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்தானலக்ஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,
அர்த்தனா, சங்கீர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரம்மஸ்ரீ விஸ்வநாராயண சர்மா, கோகிலாம்பாள், வனஜாம்பாள், சாரதாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-12-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரல்ல ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

