மரண அறிவித்தல்

In loving memory of
Wydeeswaran Kunalan
Age 72February 21, 1947 – June 23, 2019
- Born in
- Thellipalai
- Lived in
- Thellipalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டி வீதி வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரன் குணாளன் அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தீஸ்வரன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
டிலீப் அமுதன்(ஊடகவியலாளர்- உதயன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
நிலஜா(தாதி உத்தியோகத்தர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,
இரஞ்சன்(ஓய்வுபெற்ற நில அளவையாளர்- கனடா), தயாளன்(கிங்ஸ்ரன் மாநகர முன்னாள் மேயர்- லண்டன்), ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தம்பு வாத்தியார்(முன்னாள் ஆசிரியர் மகாஜனக் கல்லூரி) அவர்களின் இரண்டாவது பேரனும்,
காலஞ்சென்றவர்களான ரோகிணி இரத்தினவேல்(முன்னாள் ஆசிரியை மகாஜனக் கல்லூரி), கந்தையா இரத்தினவேல்(மேலதிக அரசாங்க அதிபர்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
Dr. இராஜகௌரி(அவுஸ்திரேலியா), இராஜவேல்(அவுஸ்திரேலியா), இராஜயோகன்(ஜோய்- லண்டன்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2019 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

