ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்தீஸ்வரன் குணாளன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்தீஸ்வரன் குணாளன்

ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்

வயது 7221 பிப்ரவரி, 1947 – 23 ஜூன், 2019

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டி வீதி வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரன் குணாளன் அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தீஸ்வரன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

டிலீப் அமுதன்(ஊடகவியலாளர்- உதயன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

நிலஜா(தாதி உத்தியோகத்தர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,

இரஞ்சன்(ஓய்வுபெற்ற நில அளவையாளர்- கனடா), தயாளன்(கிங்ஸ்ரன் மாநகர முன்னாள் மேயர்- லண்டன்), ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பு வாத்தியார்(முன்னாள் ஆசிரியர் மகாஜனக் கல்லூரி) அவர்களின் இரண்டாவது பேரனும்,

காலஞ்சென்றவர்களான ரோகிணி இரத்தினவேல்(முன்னாள் ஆசிரியை மகாஜனக் கல்லூரி), கந்தையா இரத்தினவேல்(மேலதிக அரசாங்க அதிபர்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

Dr. இராஜகௌரி(அவுஸ்திரேலியா), இராஜவேல்(அவுஸ்திரேலியா), இராஜயோகன்(ஜோய்- லண்டன்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2019 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

கொல்லன்கலட்டி வீதி, பன்னாலை, தெல்லிப்பழையை சேர்ந்த எம் சகோதரர் குணாளன்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்) மறைவால், மனத்தில் நிறைந்த துயரை உறவுகள், நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்து கொள்கிறோம்.

உப தபாற் கந்தோரோடு ஒட்டிய பெருவளவில்,
எம் சந்ததி வழி வந்த பரம்பரை நிலத்தில்,
நீங்காது நிலைத்தவரே!
இன்று ஏன் அகன்றீர்?
ஒரு கூரை வாழ்வாக,
ஒரே பானை சமையல் உண்டு
ஓடி ஆடி வலம் வந்தோம்!
ஒன்றாய் வளர்ந்தோம்!
எண்ண மனம் இனிக்கிறது, என்ன நினைவிருக்கா?
அப்பா தெ.மு.செ.வைத்தீஸ்வரன் 1953 இல் காலமாக
பேரனார் தம்பு வாத்தியார் 1959 இல் பின் தொடர,
கனகம்மா எங்கள் அம்மா கைப்பக்குவத்தில்,
அறுசுவை உணவு உண்டு,
அம்மம்மா அன்னலட்சுமி அறிவுக்கூறி வழி நடத்த,
சித்தி ரோகினி ரீச்சர் செல்ல ஆதரவில்
சித்தப்பா இரத்தினவேல் பிரதம லிகிதர்,
மேலதிக அரசாங்க அதிபர் என்று பெருமை தர,
எம் நாற்சார் வீட்டு நடுமுற்ற மல்லிகை பந்தல் மணம் பரப்ப,
கூடி வாழ்ந்து குதூகலித்தோம் நினைவிருக்கா?
பக்க வீடுகளான இரத்தின மாமி, பாப்பா மாமி, பூமா சித்தி
வீடுகளுக்கு வேலி கடவை வைத்து பண்டம்,
கறி பரிமாறி ஒன்றி வாழ்ந்தோமே! உமக்குநினைவிருக்கா?
மகாஜனாக் கல்லூரி மாதாவுக்கு ஸ்தாபகர் துரையப்பா
பிள்ளை முதல் அதிபர் தெ.து ஜயரத்தினம் வரை
ஒத்துழைத்து கனிட்ட அதிபர்கள், ஆசிரியர்
என கடமை ஆற்றிய தம்பு உபாத்தியார், ரோகிணி ரீச்சர்
வழியில் பொதுப்பணியையும்,
தந்தைவழியில் தமிழரசுக்கட்சி பணியையும் ஊரில் தொடர்ந்து
ஊர், தொண்டன் என்று போற்ற பெருமை தந்தீர்.
மனைவி கமலேஸ்வரி, ஏக மகன் டிலீப் அமிர்தன்(உதயன்- இணைச் செய்தி ஆசிரியர்), மருமகள் நிலஜா(தாதி- தேசிய வைத்தியசாலை கொழும்பு) ஆகியோர் துயரில் நிலை இங்கேயும், நினைப்பு உங்கேயுமாக வாழும் நாமும் இணைகிறோம்.

முழுக் கதையையும் வாசிக்க

ஆத்ம சாந்திக்கு அஞ்சலிகள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.