மரண அறிவித்தல்

In loving memory of
Yogeshwaran Thavaranjitham
Age 54September 14, 1961 – August 9, 2016
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் தவறஞ்சிதம் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற நவரத்தினம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்
யோகேஸ்வரன்(றஜிதா ஜுவலர்ஸ் உரிமையாளர், ஓய்வுபெற்ற அதிபர்- கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
வினோஜன்(குளோரியஸ் கணனி பயிற்சி நிலையம்), ஹேமலதன்(விவசாயபீட மாணவர்- பேராதனைப்பல்கலைக்கழகம்), அபிலாஷன், தனுசியன்(கணிதப்பிரிவு மாணவர்- வித்தியானந்தாக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கற்பூரப்புல இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

